அதிகாரியிடம், காலி குடங்களுடன் அ.தி.மு.க.வினர் மனு

அண்ணாமலைநகாில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி அதிகாரியிடம், காலி குடங்களுடன் அ.தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.

Update: 2022-05-05 17:09 GMT
அண்ணாமலைநகர், 

சிதம்பரம் அண்ணாமலைநகர் அ.தி.மு.க. நகர செயலாளர் உத்திராபதி, கவுன்சிலர்கள் முருகையன், மாலதி, நிர்மலாதேவி, வத்சலா மற்றும் கட்சி நிர்வாகிகள் அண்ணாமலை நகர் பேரூராட்சி அலுவலகத்துக்கு காலிகுடங்களுடன் திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அண்ணாமலைநகர் பேரூராட்சிக்குட்பட்ட சில வார்டுகளில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் உப்புநீராக உள்ளதால் அதனை பயன்படுத்த முடியவில்லை. எனவே இப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன், அண்ணாமலை நகர் பகுதியில் குடிநீர் தடையின்றி வழங்கப்படுகிறது. பேரூராட்சி பகுதியில் கூடுதலாக 3 ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்