கரியபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
புதூர் கிராமத்தில் கரியபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.;
ஊத்தங்கரை:-
ஊத்தங்கரையை அடுத்த புதூர் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கரியபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் கோபுரத்திற்கும், பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம், அலங்கார தீபமங்கள நடந்தது. விழாவில் விஷ்ணு ஆராதனை, வாசுதேவன் புண்யாகவாசனம், முளைப்பாறுதல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேக விழாவில் ஊத்தங்கரை, கல்லாவி, சிங்காரப்பேட்டை, காரப்பட்டு, அனுமந்தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.