குருபரப்பள்ளி:-
கிருஷ்ணகிரி அருகே மகாராஜகடையை அடுத்த மேல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன், (வயது 48), கொத்தனார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், இதனை அவருடைய மனைவி சுஜாதா கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த சரவணன், விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சரவணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.