2681 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
2681 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது வரை, 15 வயது முதல் 18 வயது வரை, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மொத்தம் 21 லட்சத்து 83 ஆயிரத்து 700 பேர் உள்ளனர். இவர்களில் இதுவரை 21 லட்சத்து 16 ஆயிரத்து 103 பேர் முதல் தவணையும், 16 லட்சத்து 6 ஆயிரத்து 908 பேர் இரண்டாவது தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும் 67 ஆயிரத்து 597 பேருக்கு முதல் தவணையும், 5 லட்சத்து 65 ஆயிரத்து 570 பேருக்கு இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. வருகிற 8-ந் தேதி 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
கொரோனா தடுப்பூசி 2-வது தவணை செலுத்திய பிறகு 9 மாதம் அல்லது 39 வாரம் கடந்த சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த முகாமில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும். திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 8-ந் தேதி 2 ஆயிரத்து 681 இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், சுங்கச்சாவடி, தனியார் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணியில் 5 ஆயிரத்து 362 பேர் பணியாற்ற உள்ளனர். முகாமை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.