வேலூர் மத்திய ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம்

பரோல் வழங்கக்கோரி வேலூர் மத்திய ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம் இருக்கிறார்.

Update: 2022-05-05 16:39 GMT
வேலூர்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். 

தற்போது பரோலில் வந்துள்ள அவர் காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கி உள்ளார். முருகன் பரோல் வழங்கக்கோரி ஜெயில் நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தார். ஆனால் அவருக்கு இதுவரை பரோல் வழங்கப்படவில்லை. அதனால் விரக்தி அடைந்த முருகன் 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும், தண்ணீர் கூட குடிக்காததால் அவர்  மயக்கம் அடைந்தார் என்று அவருடைய வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.

இதுகுறித்து ஜெயில்துறை அதிகாரிகள் கூறுகையில், உண்ணாவிரதம் இருப்பது தொடர்பாக முருகன் எவ்வித கடிதமும் நிர்வாகத்திடம் வழங்கவில்லை. அவருக்கு தினமும் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் வழக்கம்போல் வழங்கப்பட்டு வருகிறது. ஜெயில் அதிகாரியிடம் கடிதம் வழங்கினால் மட்டுமே அவர் உண்ணாவிரதம் இருப்பதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றனர். வேலூர் சரக ஜெயில் டி.ஐ.ஜி. செந்தாமரைகண்ணனிடம் கேட்டதற்கு, ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம் இருக்கவில்லை என்று கூறினார்.

மேலும் செய்திகள்