உடுமலை,
தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தேர்வு எழுதுவதற்கு வட மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று உடுமலை ரெயில் நிலையம் முன்பு ராஜேந்திரா சாலையில் ஆர்ப்பாட்டம்நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சு.சிவசங்கர் தலைமைதாங்கினார். உடுமலை நகர தலைவர்யாழ் நடராஜன், மடத்துக்குளம் ஒன்றியத்தலைவர் நா.ப.கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.நகர பொருளாளர் பழனிச்சாமி, ம.தி.மு.க.நகரசெயலாளர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடுமலை வட்ட செயலாளர் ரணதேவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் க.தண்டபாணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் ரவிக்குமார், ஆதித்தமிழர் பேரவை நகர செயலாளர் முருகேசன், த.மு.மு.க.நகர செயலாளர் கமாலுதீன், கொங்கு மண்டல ஆய்வு மையம் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தந்தை பெரியார் திராவிடர் கழக நகர செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் செய்திருந்தனர்.