மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.;

Update: 2022-05-05 14:43 GMT
எட்டயபுரம்:
 விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் பாண்டி. இவர் நாகலாபுரத்தில் உள்ள ஒரு ஹாலோ பிளாக் தயார் செய்யும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று ஹாலோ பிளாக் தயாரிக்கும் எந்திரத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ராமசாமி மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி சென்றனர். பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்த சங்கரலிங்கபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்இது குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்

மேலும் செய்திகள்