ரத்தினபுரியில் 2¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
ரத்தினபுரியில் 2¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
கோவை
கோவை ரத்தினபுரி, ஐசக்வீதியில் குமார் என்ற உதயகுமார் என்பவர் ஒரு இடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து இருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர். இதில் அங்கு 50 கிலோ கொண்ட மூட்டைகளாக பதுக்கி வைத்திருந்த 2¾ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
உதயகுமார் தலைமறைவாகி விட்டார். அவரை உணவுகடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.