அடையாளம் தெரியாத வாகனம் மோதி காட்டெருமை சாவு
குன்னூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காட்டெருமை இறந்தது.;
குன்னூர்
குன்னூர் பகுதியில் நேற்று முன்தினம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அந்த நேரத்தில் மின்சாரமும் தடைப்பட்டது. இந்த நிலையில் குன்னூர்-கோத்தகிரி சாலையில் சிம்ஸ் பூங்கா அருகே காட்டெருமை ஒன்று சாலையைகடக்க முயன்றது.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று காட்டெருமை மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், காட்டெருமைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.