புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
கோத்தகிரியில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கோத்தகிரி
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கையில் பையுடன் சந்தேகத்திற்கிடமாக நடந்து வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் கோவை மசக்காளிபாளையத்தை சேர்ந்த கணேஷ் ராமச்சந்திரன் (வயது 52) என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 128 பாக்கெட் புகலையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.