வழங்கிய நிலத்திற்கு இழப்பீடு கேட்டு கோவை பாரதியார் பல்கலைக் கழகம் முன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்
வழங்கிய நிலத்திற்கு இழப்பீடு கேட்டு கோவை பாரதியார் பல்கலைக் கழகம் முன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்;
வடவள்ளி
வழங்கிய நிலத்திற்கு இழப்பீடு கேட்டு கோவை பாரதியார் பல்கலைக் கழகம் முன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
பல்கலைக்கழகத்துக்கு நிலம்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்காக விவசாயிகளிடம் இருந்து 1000 ஏக்கர் நிலம் பெறப்பட்டது.
இந்த நிலையில் நிலத்திற்கான இழப்பீடு கொடு அல்லது எங்களது நிலத்தை எங்களுக்கே திரும்ப கொடு என்ற முழக்கத் துடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாரதியார் பல்கலைக்கழக வாசல் முன்பு திரண்ட னர்.
எனவே அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் தலைமையில் விவசாயிகள் பாரதியார் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதை அறிந்த தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்த வந்தார். அதை ஏற்க மறுத்த பி.ஆர்.நடராஜன் எம்.பி. கோவை மாவட்ட கலெக் டர் வரவேண்டும் அல்லது அவருக்கு இணையான அதிகாரிகள் வந்து உறுதி கொடுக்காமல் கலைந்து செல்ல மாட்டோம் என்றார்.
கலெக்டர் உறுதி
இதைத்தொடர்ந்து பி.ஆர்.நடராஜன் எம்.பி.யை தொடர்பு கொண்டு பேசிய கோவை மாவட்ட கலெக்டர்சமீரன், வருவாய் கோட்டாட்சியரை சம்பவ இடத்திற்கு அனுப்பி உள்ளதாகவும், மாலை நேரிடையாக விவசாயிகளுடன் பேசி தீர்வை ஏற்படுத்த உறுதி அளிப்பதாக தெரிவித்தார்.
அதன்படி வருவாய் கோட்டாட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த் தை நடத்தினார்.
அவர், கலெக்டர் அலுவலகத்தில் மாலை பேச்சு வார்த் தை நடத்தி உரிய தீர்வை எடுக்க கலெக்டர் உறுதி அளித்து உள்ளதாக கூறினார்.
மீண்டும் போராட்டம்
அப்போது, ஜூன் 15-ந் தேதிக்குள் தீர்வு ஏற்படுத்தா விட்டால் பாரதியார் பல்கலைக்கழகத்துக்குள் மீண்டும் ஆடு, மாடுகளுடன் குடியேறும் போரட்டத்தில் ஈடுபடுவோம் என கோட்டாட்சியரி டம் பி.ஆர்.நடராஜன் எம்.பி. கூறினார்.
இதையடுத்து, கலெக்டருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு எடுக்கப் பட்டது.
இதைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.