6 ஆயிரத்து 556 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்
நாகை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 556 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதினர் என மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா தெரிவித்தார்.
வெளிப்பாளையம்:
நாகை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 556 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதினர் என மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா தெரிவித்தார்.
ஆய்வு
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்றது. நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 109 மாணவர்களும், 3 ஆயிரத்து 645 மாணவிகளும் ஆக மொத்தம் 6 ஆயிரத்து 754 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 3 ஆயிரத்து17 மாணவர்களும், 3 ஆயிரத்து 539 மாணவிகளும் ஆக மொத்தம் 6 ஆயிரத்து 556 பேர் தேர்வு எழுதினர். 92 மாணவர்களும், 106 மாணவிகளும் ஆக மொத்தம் 198 பேர் தேர்வு எழுதவில்லை.
அடிப்படை வசதிகள்
நாகை மாவட்டத்தில் 97.6 சதவீத மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
--