சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2022-05-05 12:49 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில், தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு துறை நிலைய அலுவலர் வீ. மாரியப்பன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களிடம் தீவிபத்திலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது? என்பது குறித்து தீயணைப்பு உபகரணங்களை வைத்து தீ தடுப்பு செயல்முறை விளக்கம் அளித்தனர். 

மேலும் செய்திகள்