கோவில்பட்டியில் முறைகேடாக பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல்
கோவில்பட்டியில் முறைகேடாக பயன்படுத்திய 2 கார்களை வட்டார போக்குவரத்து கழக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகரில் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்த வேண்டிய கார்களை, ரெயில்வே, மின்சாரம் மற்றும் இதர துறைகளில் போக்குவரத்து வாகனமாக அனுமதி இல்லாமல் இயக்கப்படுவதாக புகார்கள் வந்தன.
இதையொட்டி கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் மற்றும் ஊழியர்கள் கோவில்பட்டி நகரில் திடீர் வாகன சோதனை நடத்தினர். சோதனையில் அனுமதிச்சீட்டு, தகுதிச் சான்று மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாமல் மின் துறைக்கு, மாதாந்திர ஒப்பந்த அடிப்படையில் இயக்கிய 2 தனியார் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கார்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம் அபராதமும், சாலை வரி ரூ.2ஆயிரத்து 500 ஆக மொத்தம் ரூ.14 ஆயிரத்து 500 விதிக்கப்பட்டது.