பால்ம் பீச் சாலையில் மின்கம்பத்தில் கார் மோதி 2 பேர் பலி

பால்ம் பீச் சாலையில் மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.

Update: 2022-05-05 12:33 GMT
கோப்பு படம்
மும்பை, 
பால்ம் பீச் சாலையில் மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
மின் கம்பத்தில் மோதல்
  நவிமும்பை பால்ம் பீச் சாலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் வாஷி நோக்கி கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அக்சர் சவுக் அருகே கார் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் சாலையில் தாறுமாறாக சென்றது. பின்னர் சாலையின் நடுவே இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. 
  இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி 3 பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த என்.ஆர்.ஐ கோஸ்டல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரின் இடிபாடுகளில் சிக்கிய 3 பேரையும் மீட்டனர்.
2 பேர் பலி
  இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. படுகாயமடைந்த மற்றொருவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
  சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பலியானவர்கள் ஷேராயாஸ் தோசர் (வயது22), ஹர்சல் ஆகியோர் என்பதும், காயமடைந்தவர் நிதின் மேத்யூ என தெரியவந்தது. அதிக வேகம் காரணமாக விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்