அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-05-05 11:14 GMT
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா 2 ஆண்டுகளுக்கு பிறகு வெகு சிறப்பாக நடக்கிறது. இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை சப்பரம் வாகனத்தில் பார்வதி அம்மன் உடன் ஆட்சீஸ்வரர் மற்றும் இளங்கிளி அம்மன் வீதி உலா நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காலை சூரிய பிரபையிலும், மாலை சந்திர பிரபையிலும் சாமி வீதி உலா நடக்கிறது. 

நாளை(வெள்ளிக்கிழமை) காலை அதிகார நந்தி சேவை, திருமுலைப்பால் உற்சவம், அறுபத்தி மூன்று நாயன்மார்கள் வீதி உலாவும், மாலை பூத வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடக்கிறது. 7-ந் தேதி காலை அன்ன வாகனம், மாலை நாக வாகனம், 8-ந் தேதி காலை யாளி வாகனம், இரவு சுவாமி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 9-ந்தேதி காலை சிம்ம வாகனம், மாலை யானை வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 10-ந் தேதி காலை 7 மணிக்கு தேர் திருவிழா வெகு சிறப்பாக நடக்கிறது.

மேலும் செய்திகள்