தலைவாசல் அருகே 2 ஏரிகளில் செத்து மிதந்த மீன்கள்

தலைவாசல் அருகே 2 ஏரிகளில் மீன்கள் செத்து மிதந்தன.

Update: 2022-05-04 22:55 GMT
தலைவாசல்:
தலைவாசல் அருகே மணிவிழுந்தான் தெற்கு ஏரி உள்ளது. இந்த ஏரியையொட்டி இன்னொரு ஏரியும் உள்ளது. இந்த 2 ஏரிகளிலும் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி நடேசன், கிராம நிர்வாக அதிகாரி ஆனந்தகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீன்கள் செத்து மிதக்க காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்