புற்று மாரியம்மன் கோவில் தேரோட்டம்
புற்று மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
தலைவாசல்:
தலைவாசல் அருகே சிறுவாச்சூர் புற்று மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 22-ந் தேதி காப்பு கட்டியுடன் தொடங்கியது. தொடர்ந்து 30-ந் தேதி காத்தவராயன் கழுகு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜை, சுப்பிரமணிய சுவாமிக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து சிறப்பு பூஜை செய்தனர். விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. மேலும் அங்கபிரதட்சணம், அக்னி கரகம் எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து நேற்று மாலை 3 மணிக்கு புற்று மாரியம்மன் கோவில் தேரோட்டம் தொடங்கியது. தேர் முக்கிய வீதி வழியாக வந்து மாலை 6 மணிக்கு நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.