விவசாயி வெட்டிக்கொலை

புளியங்குடி அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-05-04 22:21 GMT
நெல்லை:
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள கீழபுதூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 46), விவசாயி. இவருக்கும், இவருடைய சகோதரருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு சுரேஷ் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த புளியங்குடி சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்