சேலம் மாவட்டத்தில் போலீஸ் ஏட்டுகள் 80 பேருக்கு பதவி உயர்வு
சேலம் மாவட்டத்தில் போலீஸ் ஏட்டுகள் 80 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.;
சேலம்:
சேலம் மாநகரில் போலீஸ் ஏட்டாக பணியாற்றிய 58 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். இவர்கள் போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது துணை கமிஷனர்கள் மாடசாமி, மோகன்ராஜ் உடன் இருந்தனர்.
இதேபோன்று மாவட்டத்தில் ஏட்டாக இருந்த 22 பேர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றார். அப்போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் உடனிருந்தார்.