வீரசிகாமணி அருகே மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

வீரசிகாமணி அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-04 22:11 GMT
சுரண்டை:
தென்காசி மாவட்டம் வீரசிகாமணி அருகே அருணாசலபுரம் அரியநாயகிபுரம், மீனாட்சிபுரம், வடநத்தம்பட்டி, உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் இதுவரை மதுக்கடைகள் இல்லை. தற்போது அருணாசலபுரம் கிராம பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மதுக்கடை அமைய உள்ள இடத்தில் கோவில் மற்றும் அரசுப்பள்ளிகள் உள்ளது. 
இதனால் மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர். எனவே அங்கு மதுக்கடை அமைக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்