தனியார் வேலைவாய்ப்பு முகாம்-சேலத்தில் நாளை நடக்கிறது
தனியார் வேலைவாய்ப்பு முகாம் சேலத்தில் நாளை நடக்கிறது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முகாமில் பல்வேறு துறைகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
சேலம் கோரிமேடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வி தகுதி உள்ளவர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை நாடுனர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.