மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
நெல்லையில் மோட்டார்சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 53). இவர் நேற்று பழையபேட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் 80 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அவரை நெல்லை மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.