டீக்கடையில் பணம் திருட்டு
நெல்லையில் டீக்கடையில் ரூ.7 ஆயிரத்து 980-ஐ மர்மநபர் திருடி சென்று விட்டார்.
நெல்லை:
நெல்லை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் நெல்லை சந்திப்பு சாலைக்குமார சுவாமி கோவில் எதிரே டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பாஸ்கர் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது கடை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ.7 ஆயிரத்து 980 மாயமாகி இருந்தது. அதனை யாரோ மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நெல்லை சந்திப்பு குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.