நெல்லையில் நர்சுகள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நர்சுகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-05-04 21:48 GMT
நெல்லை:
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு தேர்வு நடத்தி அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நர்சுகள், ஒப்பந்த அடிப்படையில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வருகிறார்கள். இந்த நர்சுகள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறி பலமுறை போராட்டம் நடத்தியுள்ளனர். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்ட நிலையில் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் நர்சுகள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினார்கள். இந்த நிலையில் நேற்று மாலையில் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் நர்சுகள் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.




மேலும் செய்திகள்