மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.

Update: 2022-05-04 21:33 GMT
மேட்டூர்:
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை படிப்படியாக அதிகரித்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 111 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 310 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதற்கிடையே பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 105.58 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 105.80 அடியாக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்