மது விற்ற 2 பேர் கைது
நெல்லையில் மது விற்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாநகர மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்றதாக பாளையங்கோட்டை பாரதியார் தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 27) என்பவரை கைது செய்தனர். இதேபோல் தச்சநல்லூர் புது பாலம் அருகே மது விற்றதாக பேட்டை நெல்லையாபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் (48) என்பவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.