எந்திரத்தில் சிக்கி வடமாநில வாலிபர் சாவு
பாளையங்கோட்டை அருகே எந்திரத்தில் சிக்கி வடமாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
நெல்ல:
மத்தியபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் துர்வே (வயது 22). இவர் பாளையங்கோட்டை சீவலப்பேரி அருகே பாலாமடையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் எந்திர ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று ஓம் பிரகாஷ் துர்வே எந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த சீவலப்பேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஓம் பிரகாஷ் துர்வே உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.