உயரம் தாண்டுதல் போட்டியில் நெல்லை பல்கலைக்கழக மாணவிக்கு தங்கப்பதக்கம்
உயரம் தாண்டுதல் போட்டியில் நெல்லை பல்கலைக்கழக மாணவிக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.
பேட்டை:
பெங்களூர் ஜெயின் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகள போட்டி நடந்தது. இதில் உயரம் தாண்டுதலில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவி கிரேசினா மெர்லின் 1.76 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். அந்த மாணவியை பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.