பிளஸ்-2 தேர்வை 126 மையங்களில் 33,121 மாணவர்கள் எழுதுகிறார்கள்

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 126 மையங்களில் 33,121 மாணவர்கள் எழுதுகிறார்கள்

Update: 2022-05-04 20:03 GMT
திருச்சி, மே.5-
திருச்சி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 126 மையங்களில் 33,121 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்.
இன்று பிளஸ்-2 தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 28-ந் தேதி வரையிலும் நடக்கிறது.திருச்சிமாவட்டத்தில்பிளஸ்-2பொதுத்தேர்வினை 15,522 மாணவர்களும், 17,599 மாணவிகளும் என மொத்தம் 33,121 பேர் எழுதவுள்ளனர். இதற்காக 126 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தனித்தேர்வர்களுக்காக4மையங்கள்ஏற்படுத்தப்பட்டுள்ளன. மத்திய சிறையில் ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டு கைதிகள் சிலர் தேர்வு எழுதுகிறார்கள். இத்தேர்வு நடத்துவதற்கு126தேர்வுமையமுதன்மைக்கண்காணிப்பாளர்களும், 126 துறை அலுவலர்களும், 2,134 அறை கண்காணிப்பாளர்களும் நியமனம்செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் நேற்று மாணவர்களுக்கான பதிவு ரோல் எண்கள் பெஞ்ச்சுகளில் சாக்பீசால் எழுதியும், சில இடங்களில் பேப்பரில் அச்சடித்தும் ஒட்டப்பட்டன.
காலை 8.30 மணிக்குள் வர அழைப்பு
தேர்வு நடைபெறும் மையங்களில் முறைகேடுகளை தடுப்பதற்கு 270 ஆசிரியர்கள் நிலையான பறக்கும் படை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்வு நடைபெறும் நேரம் முழுவதும் மையத்திலேயே தங்கியிருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் நன்முறையில் தேர்வினை எதிர்கொள்ள ஆசிரியர்களால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு காலை 8.30 மணிக்கே வருவதற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
முககவசம் கட்டாயமா?
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்ந்துவிட்டப்படியால், மாணவ, மாணவிகளுக்கு முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வில்லை. அதே வேளையில் விருப்பமான மாணவர்கள் முககவசம் அணிந்து வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) மொழிப்பாட தேர்வு நடக்கிறது.
பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி.
பிளஸ்-1 பொதுத்தேர்வு வருகிற10-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரையிலும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 30-ந் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.பிளஸ்-1 பொதுத்தேர்வினை 16,811 மாணவர்களும், 17,605 மாணவிகளும் என மொத்தம் 34,416 பேர் எழுதவுள்ளனர். இவர்கள் 126 தேர்வு மையங்களில் தேர்வுஎழுதவுள்ளனர்.எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வினை 17,713மாணவர்களும்,17,540மாணவிகளும் என மொத்தம் 35,253 பேர் எழுதவுள்ளனர். இவர்கள் 165 தேர்வு மையங்களில் தேர்வு எழுதவுள்ளனர்.

மேலும் செய்திகள்