கடலூர் மாவட்டத்தில் 99.68 டிகிரி வெயில் கொளுத்தியது

அக்னி நட்சத்திரத்தின் முதல் நாளே கடலூர் மாவட்டத்தில் 99.68 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

Update: 2022-05-04 19:51 GMT
கடலூர், 

தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே ஆகிய 2 மாதங்களும் கோடை காலமாகும். கோடை காலத்தில் வறுத்தெடுக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பிருந்தே பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது.கடலூர் மாவட்டத்தில் 95 டிகிரிக்கும் மேலாக வெயில் பதிவாகி வருகிறது. பகல் நேரத்தில் சாலையில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வீடுகளில் இருப்பவர்கள் மின்தடை ஏற்படும் நேரங்களில் கடும் புழுக்கத்தால் அவதியடைந்து வருகின்றனர்.

‘அக்னி நட்சத்திரம்’

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக சாலைகளில் பலர் குடை பிடித்தபடி நடந்து செல்வதையும் காண முடிகிறது. கடலூரில் பிரதான சாலைகள், வணிக வளாகங்கள், கடற்கரை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மதிய நேரங்களில் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இந்தநிலையில் கோடையின் உச்சமான ‘அக்னி நட்சத்திரம்’ நேற்று தொடங்கியது. இதன் காரணமாக கடலூரில் காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்து மதிய நேரத்தில், அதிக தாக்கம் காணப்பட்டது. அக்னி நட்சத்திரத்தின் முதல் நாளான நேற்று 99.68  டிகிரி வெயில் பதிவாகியது. இதனால் வெயிலின் கொடுமையாமல் பாதசாரிகள், நடைபாதை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்