திருச்சி எடமலைப்பட்டிபுதூர், கிராப்பட்டி, இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மனைவி விஜயலட்சுமி (59). நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற விஜயலட்சுமி வீடு திரும்பவில்லை. எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.