விளம்பர பதாகை வைத்தவர் மீது வழக்கு
விளம்பர பதாகை வைத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
திருச்சி உறையூர் சி.எஸ்.ஐ. பள்ளி அருகில் கோவில் திருவிழாவுக்காக தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்க மாநில இளைஞர் அணி சார்பில் வரவேற்பு பதாகை வைக்கப்பட்டு இருந்தது. அந்த பதாகை போலீசாரின் அனுமதி இன்றி வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்க மாநில செயலாளர் மின்னல் சேகர் மீது உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.