மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திட்டக்குடியில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-04 19:26 GMT
திட்டக்குடி, 

திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஜீவா மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் வேடப்பன் தலைமை தாங்கினார். ராஜேந்திரன், செல்வகுமார், வரதராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு சுப்பிரமணியன், சின்னதுரை, முருகையன், நிதிஉலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். திட்டக்குடி வட்டத்தில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்கப்படாததால் கடந்த 3 ஆண்டுகளாக தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே மாட்டு வண்டி தொழிலாளர்களின் நலன் கருதி தொழுதூர், இடைச்செருவாய், கோழியூர், ஆவினங்குடி, இறையூர் ஆகிய இடங்களில் அரசு மணல் குவாரி திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்