முதியவரை தாக்கிய தம்பதி மீது வழக்கு

கழிவுநீர் தேங்கி நின்ற பிரச்சினையில் முதியவரை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update: 2022-05-04 19:23 GMT
விழுப்புரம்

விழுப்புரம் அருகே அய்யங்கோயில்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன்(வயது 51). தொழிலாளியான இவரது வீட்டின் எதிரே நாகப்பன் என்பவர் குடியிருந்து வருகிறார். இருவீட்டாருக்கும் வீட்டு வாசலில் கழிவுநீர் தேங்கி நிற்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெகதீசனின் தாய் சந்திரா(75). என்பவர் குளித்தபோது வழிந்தோடிய கழிவுநீர் நாகப்பன் வீட்டு வாசல் முன்பு தேங்கி நின்றது. இதனால் ஆத்திரமடைந்த நாகப்பன் அவரது மனைவி சுகுணா இருவரும் சேர்ந்து ஜெகதீசனை ஆபசமாக திட்டியதோது அவரது தந்தை கண்ணப்பன்(87) என்பவரை விறகு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். 

இதில் படு காயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜெகதீசன் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் நாகப்பன், கசுகுணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்