தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தீராத வயிற்று வலியால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-04 19:06 GMT
வி.கைகாட்டி, 
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கீழத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி ஜெயக்கொடி (வயது 38). இவர்களுடைய மகள் ஜெயபிரியா (14). கடந்த 2-ந் தேதி இரவு ஜெயக்கொடிக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டதால் அவர் தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெயக்கொடி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்