வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

திருவாரூரில் நடந்த கலை திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சிதம்பரம் பரிசுகளை வழங்கினார்.

Update: 2022-05-04 18:52 GMT
திருவாரூர்;
திருவாரூரில் நடந்த கலை திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சிதம்பரம் பரிசுகளை வழங்கினார்.
கலை திருவிழா
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ- மாணவிகளுக்கான கலை திருவிழா நடத்தப்பட்டது. இதில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் என போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சிதம்பரம் பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
பரிசு
இதன்படி போட்டியில் 15 பேருக்கு முதல் பரிசு ரூ.500 வழங்கப்பட்டது. 
இரண்டாம் பரிசு 15 பேருக்கு ரூ.300-ம், 3-ம் பரிசு 15 பேருக்கு ரூ.200 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொறுப்பு) விஜயன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்