காளையார்கோவில் அருகே பரிதாபம்: பள்ளத்தில் மோட்டார்சைக்கிள் பாய்ந்து அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி
பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காளையார்கோவில்,
பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3 பேர் பலி
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஆண்டிச்சி ஊருணி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன்கள் செல்லத்துரை (வயது41), சங்கர் (38). இவர்கள் 2 பேரும் தங்களது உறவினர் மனோகரன் மகன் அஜீத் (22) என்பவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் காளையார்கோவில் சென்றுவிட்டு ஆண்டிச்சி ஊருணி கிராமத்திற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சூசையப்பர் பட்டினம் விலக்கு அருகில் வந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த செல்லத்துரை, சங்கர், அஜீத் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
விசாரணை
இந்த சோக சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் காளையார்கோவில் போலீசாரும், அப்பகுதியினரும் அங்கு திரண்டனர்.
பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் உள்பட 3 பேர் விபத்தில் பலியானது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.