எல்.ஐ.சி. ஊழியர்கள் வெளிநடப்பு போராட்டம்
எல்.ஐ.சி. ஊழியர்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகரில் அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்க விருதுநகர் கிளையின் சார்பில் எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை கண்டித்து 2 மணிநேர வெளிநடப்பு போராட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் பவளவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். வங்கி ஓய்வூதியர் சங்க செயலாளர் மாரிக்கனி வாழ்த்தி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாநில தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், பொதுச் செயலாளர் சுகுமாரன் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.