தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
உடையார்பாளையம் அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.;
உடையார்பாளையம்,
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் உடையார்பாளையம் அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி அணைப்பது, தீ விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை எப்படி பாதுகாப்பாக தூக்கி வருவது, தீவிபத்து ஏற்பட்டால் அடுத்து செய்ய வேண்டியவை குறித்து செயல்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தனர்.