அரியலூரில் கருமேகங்கள் சூழ்ந்தன

அக்னி நட்சத்திர தொடக்க நாளில் அரியலூரில் கருமேகங்கள் சூழ்ந்தன.

Update: 2022-05-04 18:45 GMT
அரியலூர், 
அரியலூரில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியதையொட்டி காலை 7 மணியளவில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியத்தில் அனல் காற்று வீசியது. இதனால் பஸ் நிலையம், கடை வீதிகளில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. மாலை 4 மணியளவில் இருந்தே கருமேகங்கள் சூழ்ந்தன. ஆனால் மழை பெய்யவில்லை. இருப்பினும் அரியலூரை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. கடும் வெயிலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

மேலும் செய்திகள்