மலையாண்டி கோவில் ஊரணியில் மூழ்கி வாலிபர் பலி

மலையாண்டி கோவில் ஊரணியில் மூழ்கி வாலிபர் பலியானார்.

Update: 2022-05-04 18:44 GMT
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே வலையப்பட்டி மலையாண்டி கோவிலில் ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பொன்னமராவதி போலீசாருக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஊரணியில் கிடந்த வாலிபர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் வலையப்பட்டியை சேர்ந்த நடராஜன் மகன் முரளிக்கிருஷ்ணன் (வயது 26) என்பதும், சென்னையில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் திருவிழாவிற்காக வலையப்பட்டி பகுதியில் உள்ள நண்பர்களை சந்திக்க வந்துள்ளார். முரளிக்கிருஷ்ணன் மது போதையில் மயங்கி ஊரணிக்குள் விழுந்து மூழ்கி இறந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே முரளிக்கிருஷ்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்