மாணவியை பலாத்காரம் செய்தவா் போக்சோவில் கைது
மாணவியை பலாத்காரம் செய்தவா் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கீரனூர்:
இலுப்பூர் அருகே பனம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 26). இவர் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தார்.