நிலக்கடலை ரூ.18 லட்சத்து 48 ஆயிரத்துக்கு ஏலம்
நிலக்கடலை ரூ.18 லட்சத்து 48 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
நொய்யல்,
நொய்யல் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகில் உள்ள கரூர் ஒன்றியம், க.பரமத்தி ஒன்றிய விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 289.64 குவிண்டால் எடை கொண்ட 860 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது. நிலக்கடலை அதிக விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.67.61-க்கும், குறைந்த விலையாக ரூ.58.20-க்கும், சராசரி விலையாக ரூ.64.61-க்கும் என ெமாத்தம் ரூ.18 லட்சத்து 47 ஆயிரத்து 962-க்கு ஏலம் போனது.