ஆலங்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

ஆலங்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

Update: 2022-05-04 18:35 GMT
ஆலங்குடி:
கறம்பக்குடி குளக்காரன் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஆனந்தன் (வயது 29). இவரும் கறம்பக்குடி-புதுக்கோட்டை ரோடு பகுதியை சேர்ந்த வீரையன் மகள் வெண்மணி (26) என்பவரும் காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கவிதா, இருதரப்பு பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த பெற்றோர்கள் இவர்களது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து ஆனந்தன்-வெண்மணி ஆகிய இருவருக்கும் திருமண வயது கடந்து விட்டதால் அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்