கறம்பக்குடியில் காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவில் திருவிழா

காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2022-05-04 18:30 GMT
கறம்பக்குடி:
கறம்பக்குடி காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பெண்கள் மதுகுடம் எடுத்து வந்து சாமி கும்பிட்டனர். மேலும் கோவில் முன்பு பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும் வழிபட்டனர். தட்டாவூரணி, தென்னகர் ஆகிய பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர். ஆங்காங்கே நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கிடா வெட்டு நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி நாடகம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதேபோல் மழையூர் பிடாரியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நேற்று நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் நவதானியங்களால் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை சுமந்து ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்