பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலியானார்.

Update: 2022-05-04 18:22 GMT
வடகாடு:
வடகாடு அருகே மாங்காடு அவையன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கலையரசி (வயது 36). இவர், சம்பவத்தன்று மாங்காடு மழவராயன் தெருவை சேர்ந்த ராமையா என்பவருடைய விவசாய நிலத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது, கலையரசியை பாம்பு கடித்தது. இதனைத்தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் கலையரசியை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கலையரசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடகாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்