கடத்தூர் அருகே சக்தி விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கடத்தூர் அருகே சக்தி விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-05-04 18:03 GMT
மொரப்பூர்:
கடத்தூர் அருகே உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் சக்தி விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி காப்பு கட்டுதல், முளைப்பாலிகை போடுதல், தீர்த்த குடம் எடுத்தல், பாலிகை ஊர்வலம், யாகசாலை பூஜைகள், சாமி நிலைநிறுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று யாகசாலையில் இருந்து புனித நீர் குடம் கோவிலை சுற்றி எடுத்து செல்லப்பட்டது. பின்னர் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிகளுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்