கம்பைநல்லூர் அருகே கஞ்சா விற்றவர் கைது

கம்பைநல்லூர் அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-04 18:03 GMT
மொரப்பூர்:
கம்பைநல்லூர் போலீசார் ரோந்து சென்றனர். கெட்டுப்பட்டி அருகே பையுடன் நின்று இருந்தவர் போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்து ஓட முயன்றார். போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் அதேபகுதியை சேர்ந்த ஜெயம் (வயது 61) என்பதும் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்