மோட்டார் என்ஜினீயரிங் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
மோட்டார் என்ஜினீயரிங் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராசிபுரம்:
எலச்சிபாளையத்தை சேர்ந்தவர் செங்கோடன். இவர் ராசிபுரம் அருகே ரிக் வண்டி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் ரிக் வண்டி உரிமையாளர், செங்கோடனின் ஓட்டுனர் உரிமத்தை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து நாமக்கல் மாவட்ட மோட்டார் என்ஜினீயரிங் தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆண்டகளூர் கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம், தாசில்தார் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் விரைவில் ஓட்டுனர் உரிமம் பெற்று தரப்படும் என்று கூறினர். இதையடுத்து சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கந்தசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி, மாவட்ட மோட்டார் தொழிலாளர் சங்கம் சுரேஷ், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் மற்றும் ரிக் வண்டி டிரைவர் செங்கோடன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.